» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
கர்நாடக மக்களுக்கு நாடே நன்றி சொல்கிறது: ப.சிதம்பரம் கருத்து
சனி 13, மே 2023 4:48:52 PM (IST)
தேர்தலில் தெளிவான தீர்ப்பை தந்த கர்நாடக மக்களுக்கு நாடே கடமைப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், கர்நாடக மாநில வாக்காளர்களுக்கு என் அன்பான, உளமார்ந்த நன்றி. சட்டமன்றத் தேர்தலில் மிகத் தெளிவான, ஆணித்தரமான தீர்ப்பைத் தந்த கர்நாடக மக்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டிருக்கிறது, நன்றி சொல்கிறது. இதனை ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலாகப் பார்க்கக் கூடாது. இந்திய அரசியல் சாசனத்தின் உயரந்த நோக்கங்களைக் காப்பாற்றி நிலைநாட்டிய பெரும் போரில் வெற்றியடைந்தோம் என்று பெருமைப்படவேண்டும். பெரும்பான்மை மேலாதிக்கம், மதக்காழ்ப்புணர்வு, வெறுப்பு, வன்செயல் என்று சரிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்திய நாட்டைத் தற்காத்து வெற்றி பெற்றிருக்கிறோம் என்று பள்ளுப் பாட வேண்டும். இனி இந்திய மக்கள் விழித்துக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)










