» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்; ஆதரிக்க மாட்டேன்: சீமான் பேட்டி!
புதன் 19, ஏப்ரல் 2023 4:04:26 PM (IST)
"விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்; ஆனால் ஆதரிக்க மாட்டேன்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளன்று மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய்யின் அரசியல் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை விஜய் செய்கிறார். அதை நான் வரவேற்கிறேன். தமிழகத்தில் அரசியல் மாற்று என்பதில், இந்தக் கட்சியை விட்டால் அந்தக் கட்சி, அந்தக் கட்சியை விட்டால் இந்தக் கட்சியென்று, இந்த நிலமும், மண்ணும் ஒரு அரை நூற்றாண்டைக் கடந்துவிட்டது. விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை விஜய் அரசியல் கட்சி தொடங்கினால், அவரை ஆதரிக்க மாட்டேன். விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும். நான் ஒரு தனித்த பேரியக்கமாக வரவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு கனவு இருக்கிறது" என்று கூறினார்.
மக்கள் கருத்து
VJAYYETHAN அவர்களேApr 28, 2023 - 05:47:21 PM | Posted IP 162.1*****
நீங்க எல்லாம் திருடர்களுக்கு ஏற்கனவே வாக்களித்து தேர்ந்தெடுத்தேர்களே அவர்களிடம் போய் கேளுங்க வெண்ணை.
VJAYYYETHANApr 19, 2023 - 04:18:42 PM | Posted IP 162.1*****
தலைவரே விஜயை பற்றி ஏன் கவலைபடுகிறீர்கள், சூடான் நாட்டில் பயங்கர பிரச்சினையாம் , நீங்கள் உடனே சென்று அந்த பிரச்சினையை தீர்த்து வைத்து விடுங்கள்... உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும் என உலக நட்டு தலைவர்கள் கருதுகிறார்கள்.....
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)











SURYAமே 1, 2023 - 04:08:04 PM | Posted IP 162.1*****