» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
அ.தி.மு.க.பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 28, மார்ச் 2023 11:48:09 AM (IST)

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வெளியானது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்" என அறிவித்த நீதிமன்றம் பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க நீதிபதி குமரேஷ்பாபு அனுமதி அளித்தார். எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திள்ளதால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.அ.தி.மு.க. அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் அ.தி.மு.க. தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆன பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி "அதிமுக பொதுச் செயலாளராக நான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்துள்ளனர். என்னை அதிமுக பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்" என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

2026 தேர்தலுக்கு கற்பனை வீடியோ போதும் என்று நினைத்து விட்டார்கள் : முதல்வர் விமர்சனம்!
செவ்வாய் 17, ஜூன் 2025 4:57:38 PM (IST)

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
செவ்வாய் 3, ஜூன் 2025 5:31:25 PM (IST)

ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
வியாழன் 29, மே 2025 4:59:01 PM (IST)

பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
திங்கள் 19, மே 2025 11:46:16 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)
