» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

செவ்வாய் 14, மார்ச் 2023 10:26:59 AM (IST)

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 12-ந்தேதியன்று (நேற்று முன்தினம்) இரண்டு விசைப்படகுகளுடன் (பதிவு எண்: IND-TN-08-MM-81 மற்றும் IND-TN-06-MM-7818) சிறைபிடிக்கப்பட்டனர் என்பதை உங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்திய மீனவர்கள் இவ்வாறு இலங்கையை சேர்ந்த சிலர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்துக்குள் நடந்த 3-வது சம்பவம் ஆகும்.

மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். அடிக்கடி நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து, அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குகின்றன. எனது முந்தைய கடிதங்களில், இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறேன்.

வெளியுறவுத்துறை மந்திரியும் இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் நீங்கள் (பிரதமர்) உடனடியாக இதில் தலையிடவேண்டும். எனவே, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது. இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடி படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory