» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
இந்தியா பற்றி சில ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன : அனுராக் தாக்குர் கண்டனம்
சனி 11, மார்ச் 2023 10:04:47 AM (IST)
சில வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியா பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் தொடர்ந்து பொய்களை பரப்புகின்றன என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் பற்றி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரை குறும் புத்தனமானது, கற்பனையானது. இந்தியா மற்றும் அதன் ஜனநாயக அமைப்புகள்மற்றும் மதிப்புகள் பற்றி தவறானகருத்தை பரப்பும் ஒரே நோக்கத்துடன் இது வெளியிடப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் மற்றும் இதுபோன்ற சில வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியா பற்றியும், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி பற்றியும் தொடர்ந்து பொய்களை பரப்புகின்றன.இது போன்ற பொய்கள் நீண்ட காலம் நீடிக்க முடியாது. காஷ்மீரில் உள்ள பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அப்பட்டமான பொய்களை பரப்பியுள்ளது கண்டனத்துக்கு உரியது. இந்திய மண்ணில் தங்களின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என்ற மனநிலை உடையவர்களை இந்தியர்கள் அனுமதிக்கமாட்டார்கள். இவ்வாறு அனுராக் தாக்குர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)










