» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு : அன்புமணி ராமதாஸ்
திங்கள் 6, பிப்ரவரி 2023 5:05:56 PM (IST)
தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை அருகே சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 42 ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 13-வது தற்கொலை இது. இதுவரை நடந்த தற்கொலைகளுக்கும், இந்த தற்கொலைக்கும் ஆளுநரே பொறுப்பேற்கவேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு 112 நாட்கள் ஆகிவிட்டன. அதுகுறித்து ஆளுநர் எழுப்பிய ஐயங்களுக்கு, சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் விளக்கம் அளித்து 68 நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் சட்டத்திற்கு இன்றுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது முறையல்ல.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்த அரசின் விளக்கங்கள் மனநிறைவு அளித்தால் ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் திருப்பி அனுப்ப வேண்டும். இரண்டையும் செய்யாமல் சட்டத்தை கிடப்பில் போட்டு, ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக ஆளுநருக்கு அரசு அழுத்தம் தரவேண்டும்; இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
MANGOFeb 8, 2023 - 03:57:06 PM | Posted IP 162.1*****
நீங்கள் படித்தவர், பண்பானவர், நீங்களுமா திமுக/ செபாஸ்டியன் சீமான் மாதிரி இப்படி பேசுகிறீர்கள்.....
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)











டாஸ்மாக்Feb 8, 2023 - 10:36:00 PM | Posted IP 162.1*****