» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சனி 4, பிப்ரவரி 2023 5:00:09 PM (IST)

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில் எந்தெந்த கோரிக்கைகளை மக்கள் முன், நாம் எடுத்து சொன்னோமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. எதிர்வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதற்கு கையெழுத்திட தயார் என்றும் அறிவித்தேன்.

அதற்கேற்ப இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று கூறியிருந்தேன். அதேபோல், இன்று இரட்டை இலை சின்னத்தின் மூலம் அதிமுக போட்டியிடுகிற வாய்ப்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம்

பொது வேட்பாளரை நிறுத்த நான் கையெழுத்திட தயார் என்று அறிவித்தேன். என்னை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டும் அல்ல, கட்சியிலேயே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பகை உணர்வோடு கூறிவந்தனர்.

Also Read - உடுமலை நகராட்சி சந்தையில் நேற்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கமிஷன் மண்டிகள் மற்றும் மொத்த விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் என்னையும் என்னை சார்ந்தவர்களையும் உள்ளடக்கி எங்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர்தான், பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எங்களை எதிர்த்தோருக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்கிற என்னுடைய பொறுப்பு நீடிப்பதற்கு எவ்வித தடையும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் விதிக்கப்படவில்லை. ஆனால், அதே நேரத்தில் சச்சரவுக்கு உள்ளான பொதுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பொறுப்பை சுப்ரீம் கோர்ட்டும் , தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை.

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்மீது பற்றுக்கொண்ட தொண்டர்களும் மற்றும் என்மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்களும் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

PURATCHI THALAIVARFeb 5, 2023 - 02:47:22 PM | Posted IP 162.1*****

குட்டிக்கரணம் போடுவதில் உங்களை மிஞ்சி தமிழ்நாட்டில் யாரும் இல்லை..ஐயா. திமுகவினர் கூட உங்களிடம் பாடம் கற்க வேண்டும்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory