» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன்: சசிகலா
செவ்வாய் 24, ஜனவரி 2023 4:29:46 PM (IST)
நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன். தி.மு.க.வை வீழ்த்த அனைவரும் கைகோர்க்க வேண்டும் என சசிகலா கூறினார்.
மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் இன்று சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு கட்சியில் இரண்டு, மூன்று பேர் சேர்ந்து முடிவு எடுக்க முடியாது. அப்படி முடிவு எடுக்கும் கட்சி தி.மு.க.வாக இருக்கலாம். அ.தி.மு.க. மிகப் பெரியது. பா.ஜ.க. அலுவலகம் செல்லும் நிலையில் அ.தி.மு.க. இல்லை. இதைப் புரிந்துகொள்ள வேண்டியவர்கள், புரிந்துகொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்திப்பதற்கான முயற்சிகளை எடுத்து கொண்டு தான் உள்ளேன்.அ.தி.மு.க. தொண்டர்களின் முடிவுதான் என்னுடைய முடிவு. தொண்டர்களின் குமுறலைப் பார்த்துக் கொண்டுள்ளேன். இரட்டை இல்லை சின்னத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது.நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன். சில பேரை எடை போட்டுக் கொண்டுள்ளேன். பொதுச் செயலாளர் பதவியை அளிக்கக் கூடிய இடத்தில் தொண்டர்கள் தான் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அ.தி.மு.க. இணைப்பு நடக்கும்.
தேர்தலின்போது 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று ஒரு பெட்டி நிறைய மனுக்களை வாங்கி, பூட்டி, சாவி என்னிடம் இருக்கும். ஆட்சிக்கு வந்ததும் இதனை திறந்து குறைகளை தீர்ப்பேன்' என்றார். ஆனால், இன்னும் அந்தப் பெட்டி திறக்கப்படவே இல்லை. ஒருவேளை சாவி தொலைந்து போய்விட்டது போல. யாரையும் குறை சொல்ல முடியாது. நாம் என்ன கைக்குழந்தையா? நம்மை அவர்கள் கட்டுப்படுத்த. என் நிழலிடம் கூட யாராலும் நெருங்க முடியாது அனைவரும் தி.மு.க.வை வீழ்த்த கைகோர்க்க வேண்டும்" என்று சசிகலா கூறினார்.
மக்கள் கருத்து
MGR RASIKARKALJan 30, 2023 - 04:23:49 PM | Posted IP 162.1*****
மக்களை பற்றியும் அரசியல் பற்றியும் பேச ஒரு தகுதி வேண்டாமா ? இவர் ஜெ வின் புகழுக்கு களங்கம் விளைவித்தவர் இவரை போலவே டயர் நக்கியும் பதவி பதவி என்று அழைப்பவர். இவர்களை அதிமுக தொண்டர்கள் ஒதுக்கித்தள்ளவேண்டும். இவர்கள் அதிமுகவில் நுழைந்துவிட்டால், அதிமுக அழிந்துவிடும்.
வேலைக்காரிJan 26, 2023 - 12:44:20 PM | Posted IP 162.1*****
என்பதை மறந்து விட்டு பேச கூடாது...
,மக்கள்Jan 26, 2023 - 11:23:15 AM | Posted IP 162.1*****
இரட்டை இலையை ஆட்டைய போட பார்க்கிறார் கொழுப்பு
நீJan 25, 2023 - 05:00:42 PM | Posted IP 162.1*****
உயிரோட இருக்கிறதே ஆபத்து தான்
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)











JAY JAY JAYJan 30, 2023 - 04:24:51 PM | Posted IP 162.1*****