» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் திமுக அரசு: கிஷோர் கே.சாமி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

திங்கள் 21, நவம்பர் 2022 8:25:00 PM (IST)

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மழை பாதிப்பு இடங்களில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வு தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த கிஷோர் கே. சாமி, அவதூறு கருத்து பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைதேடி வந்தனர். இதனிடையே அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்த போலீசார், 4-வது வழக்கில் கிஷோர் கே.சாமியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். தற்போது அவரிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கிஷோர் கே.சாமி கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கிஷோர் கே.சாமி கைதை தமிழ்நாடு பாஜக வன்மையாக கண்டிக்கிறது. தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த அரசு, தமிழக பாஜக பெண் தலைவர்களை இழிவாக பேசிய திமுக பேச்சாளரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? கிஷோர் கே.சாமி தந்தையாரிடம் உரையாடி, தேவையான சட்ட உதவிகளை தமிழ்நாடு பாஜக செய்யும் என்ற உத்தரவாதத்தை அளித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory