» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
ஏழை மக்களுக்கு உதவவே 10% இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அண்ணாமலை வரவேற்பு
திங்கள் 7, நவம்பர் 2022 5:09:01 PM (IST)
ஏழை மக்களுக்கு உதவவே 10% இடஒதுக்கீடு. இதனால் பட்டியலின, பிற்படுத்தப்பட்டவர்களின் சலுகை பறிபோகாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-ஆவது திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறியுள்ளார்.
சென்னையில் மோடியின் தழிழகம் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசுகையில், மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. 10% இடஒதுக்கீடு தொடர்பாக திமுக தவறான பிரசாரம் செய்கிறது. ஏழை மக்களுக்கு உதவவே 10% இடஒதுக்கீடு. இதனால் பட்டியலின, பிற்படுத்தப்பட்டவர்களின் சலுகை பறிபோகாது என அண்ணாமலை கூறினார்.
மக்கள் கருத்து
unmaiNov 8, 2022 - 04:20:02 AM | Posted IP 162.1*****
So if you are an upper caste person and your are earning 65000 rupees a month, then you are poor and you are eligible to apply for jobs under the 10./. reservation.
truthNov 8, 2022 - 04:16:40 AM | Posted IP 162.1*****
The so called poor people eligible for this upper class reservation will be earning upto 66,000 rupees per month. What a Joke.
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)











superNov 8, 2022 - 07:13:20 AM | Posted IP 162.1*****