» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா

வியாழன் 16, மே 2024 7:13:44 PM (IST)நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா நடந்தது. 
 
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் தூயயோவான் பேராலயத் தில் விபிஎஸ் வகுப்புகள் 10 நாட்கள் நடந்தது.இதன் நிறைவு விழா பேரா லய வளாகத்தில் நடந்தது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத் தார். சுவீட்டி, ஏஞ்சல், ஹெலன், ஆசா, சோபியா ஆகியோர் விபிஎஸ் இயக்குனர்களாகவும் , 71 பேர் ஆசிரியர்களாகவும் செயல்பட் டனர். மாணவ, மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இதையடுத்து மாணவ_ மாணவிகளுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன.இதில் 550 மாணவ, மாணவி கள் பங்கேற்றனர் . இதற்கான ஏற்பாடுகளை தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம், உதவிகுரு பொன்செல்வின் அசோக்குமார், சபை ஊழியர்கள் ஜெசு, ஜெபராஜ் சாமுவேல், சேகர பொருளாளர் எபனேசர் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory