» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் ஆண்டு விழா
செவ்வாய் 14, மே 2024 9:06:30 PM (IST)

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் 25 வது ஆண்டு விழா நடந்தது.
தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி தாளாளர் செல்வின் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் பேரா.ஜெயச்சந்திரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். ஒய்வு பெற்ற குருவானவர் ஜெரேமியா, முன்னாள் கல்லூரி தாளாளர் ஜேஸ்மின் ராபர்ட்சன், ஒய்வு பெற்ற ஆசிரியை விஜேந்திரா தியோடர், கோவை தொழிலதிபர் தனுஷ்கரன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் இடம் பெற்றன. நிகழ்ச்சியை கல்லூரி அலுவலர் சுந்தரி தொகுத்து வழங்கினார். இதில் மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் சாமுவேல், நாசரேத் தூய யோவான் பேராலய சபை ஊழியர்கள் ஜெசு, ஜெபராஜ் சாமுவேல், கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆசிரியை கிறிஸ்டினா ஜாண்சன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)

செவித்திறன் குறைந்தோர்க்கான பள்ளியில் குடியரசு தினவிழா
திங்கள் 27, ஜனவரி 2025 10:22:16 AM (IST)
