» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டி கிட்ஸ் பள்ளியில் பட்டமளிப்பு விழா

வியாழன் 28, மார்ச் 2024 4:18:46 PM (IST)



கோவில்பட்டி சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளியின் பட்டமளிப்பு விழா நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதில் யுகேஜி யிலிருந்து முதல் வகுப்பிற்கு தகுதிபெற்ற இளம் மழலையர்களுக்கு பட்டமளிப்பு செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நாடார் உறவின் முறை சங்க துணைத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் சுரேஷ்குமார், பத்ரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். 

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கோவில்பட்டி கிளை உதவி மேலாளர் செல்வராஜ் கலந்துகொண்டு மழலை குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டினார். இதில் பள்ளி குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன், மணிக்கொடி, பொன் ராமலிங்கம், ரவிச்சந்திரன், சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளி முதல்வர் மீனா, நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வி,முன்னாள் மாணவர் வேல்முருகன், ஆசிரியர்கள் சகாயகலாவதி,சாந்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory