» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தென் மண்ட அளவிலான போட்டி: நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி!
ஞாயிறு 3, மார்ச் 2024 7:01:22 PM (IST)
ஆலன் திலக் கராத்தே பள்ளிமாணவர்கள் தென் மண்டல அளவிலான போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் வைத்து தென் மண்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் . ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்றனர். பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் கராத்தே டென்னிசனை சவுத் இந்தியன் டிரஸ்ட் நிறுவனர் சுரேஷ் மற்றும் சாண்டி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பாராட்டினார். இதில் மாஸ்டர் காளிராஜ் மாஸ்டர் சபரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.