» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தேசிய வழி திறனறிவுத் தேர்வில் மூக்குப்பீறி பள்ளி மாணவ, மாணவி வெற்றி!
வெள்ளி 1, மார்ச் 2024 9:47:40 PM (IST)
நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜாய்லின் ஹென்சிகா மற்றும் மாணவன் கணபதி ஆகியோர் தேசிய வழி திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய வழி திறனறிவுத்தேர்வு பிப்ரவரி 2024 ல் நடைபெற்றது. இத் தேர்வில் எட்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி ஜாய்லின் ஹென்சிகா மற் றும் மாணவன் கணபதி ஆகியோர் வெற்றி பெற்று மத்திய அரசின் ஊக்கத் தொகையான மாதம் ரூ. 1,000/- வீதம் 4 வருடங்க ளுக்கு ரூ 48,000/- பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ,மாணவியை பள்ளித் தாளாளர் செல்வின், பள்ளித்தலைமையாசிரியர் எட்வர்ட், ஆசிரியர்கள்,அலுவலர்கள், பள்ளி ஆட்சிமன்றக் குழு, பள்ளி பெற்றோர் ஆசிரியர்கழகம் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர். பள்ளி சார்பாக மாணவ, மாணவிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.