» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் ரீட்ஸ் செயல்முறை விளக்க நிகழ்ச்சி!
வியாழன் 7, டிசம்பர் 2023 5:06:12 PM (IST)
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் ரீட்ஸ் திட்டத்தின் செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடிஅன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் சங்கத்தின் இந்தியா ரீட்ஸ் என்ற மாணவர்களிடம் படிக்கும் பழக்கத்தினை மேம்படுத்தும் திட்டத்தின் செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் அ.ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரை வழங்கினார்.
Language and Literature: A Tool for Social Change என்ற ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலினை இந்திய ஆங்கில மொழி ஆசரியர் சங்கத்தின் தேசிய செயலரும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைத் தலைவருமான (பணிநிறைவு) கே. இளங்கோ வெளியிட, தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் எம். இளங்குமரன் பெற்றுக்கொண்டார்.
கற்றல் மேலாண்மை அமைப்பின் மூலம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவது பற்றி செயல்முறை விளக்கத்தினை பென்ஹைவ் டெக்னாலஜி பிரைவேட் நிறுவனத்தின் உறுப்பினர் பிரசன்னா பால் ஆனந்த் விளக்கினார். இந்தத் திட்டத்தில் தூத்துக்குடி தூய மரிய்னனை கல்லூரி, கீதா ஜீவன் கல்லூரி, மற்றும் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் இருந்து 65 ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.