» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு!
வியாழன் 16, நவம்பர் 2023 10:06:00 AM (IST)
நாசரேத்புனிதலூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தலைமை வகித்தார். மாணவி அனுஷா தெபோராள் வரவேற்றார்.
முன்னாள் எம்.பி., ஏ.டி.கே.ஜெயசீலன், கல்லூரி முதல்வர் சோபியா செல்வராணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.மாணவ,மாணவிக ளுக்கு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவி ஸ்வேதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி பிரைட்டி நன்றி கூறினார்.