» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
குழந்தைகள் தின விழா: தேசத் தலைவர்களின் வேடம் அணிந்து அசத்திய மாணவர்கள்
புதன் 15, நவம்பர் 2023 3:17:50 PM (IST)
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் தேசத் தலைவர்களின் வேடம் அணிந்து மாணவர்கள் அசத்தினர்.
நாடார் உறவின்முறைச் சங்க துணைதலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயபாலன் பொருளாளர் சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடந்த மாறுவேடப்போட்டியில் காந்தி, பாரதி, உள்ளிட்டதேசத் தலைவர்களின் மேடம் அணிந்து அசத்தினர். பேச்சுப்போட்டி, நடனம் மற்றும் வினாடிவினா, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கோவில்பட்டி வனச்சரக அலுவலர் மணிமாறன் புத்தகங்களும், சான்றிதழ்களும், இனிப்பும் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் சங்க உறுப்பினர்கள் ராஜேந்திர பிரசாத், மகேந்திரன், கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், பள்ளிக்குழு உறுப்பினர்கள் தாழையப்பன், பால்ராஜ், வனவர் கேசவன், வனக்காப்பாளர் தமிழ்செல்வன் மற்றும் திரளான பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக பள்ளி மாணவி வெண்ணிலா வரவேற்றார். நிகழ்ச்சிகளை மாணவி லாவண்யா தொகுத்து வழங்கினார். நிறைவாக மாணவர் ஹரிஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளை முதல்வர் பிரபு சிறப்பாக செய்திருந்தார்.