» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் சாலமோன் பள்ளியில் குழந்தைகள் தின விழா!
செவ்வாய் 14, நவம்பர் 2023 3:46:27 PM (IST)
நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
மறைந்த பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134-வது பிறந்த நாள் விழா பள்ளியில் கொண்டாடப் பட்டது. இவ்விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன், நேருவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் வாழ்த்தி பேசினார்.
இவ்விழாவில் குழந்தைகள் நேருவின் வேடம் அணிந்து வந்து இருந்தனர். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. மாணவர்கள் நேருவின் வாழ்வில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகளை நடித்து காட்டினர். பள்ளி உதவி முதல்வர் பியூலா ஜாய்ஸ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.