» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திங்கள் 20, மார்ச் 2023 9:42:57 PM (IST)தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

2010 ஆம் ஆண்டு முதல் மாா்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வைத்து விளாத்திகுளம் வனத்துறை சார்பில் வனச்சரக அலுவலர் கவின் உத்தரவின் போில் சிட்டுக்குருவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி சிறப்பு உரையாற்றினார். வனவர் நாகராஜ் சிட்டுக்குருவி பறவை இனத்தின் பாதுகாப்பு பற்றியும் சுற்றுச்சூழல் சம நிலையில் சிட்டுக்குருவியின் பங்களிப்பு பற்றியும் மாணவர்களிடம் எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் வனக்காவலர்கள் ஜெயபால்,ராமசாமி உட்பட மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory