» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் மகளிர் தின விழா

வெள்ளி 10, மார்ச் 2023 11:00:18 AM (IST)நாசரேத் மர்காஷியஸ் கலை கல்லூரியில், எம்ஜிஎம் மார்க்கெட்டிங் லயன்ஸ் கிளப் ஆஃப் நாசரேத் டவர், காவல்துறை சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் நாசரேத் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு ராயஸ்டன் காவல் உதவி செயலியை அறிமுகம் செய்து அதன் பயன்பாடு குறித்து மாணவிகளுக்கு விளக்கினார், இந்நிகழ்வில் திருப்பூர் ரகசியா பிரீமியம் லெக்கின்ஸ் விநியோக பிரிவு மேலாளர் கணபதி மாரியப்பன் கல்லூரி மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். 

நாசரேத் லயன்ஸ் சங்கம் சார்பில் வட்டாரத் தலைவர் தேவதாஸ், செயலர் அருள்மணி, அகிலன், கல்லூரியில் யூனிட் 63 மற்றும் யூனிட் 131 ஐ சார்ந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் டாக்டர் செல்லா ரூத், டாக்டர் பியூலா ஹேமலதா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ரமேஷ் தலைமையில் கல்லூரி பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory