» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இரத்த தான முகாம்

வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:30:59 AM (IST)தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டத்தின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து இரத்த வங்கி மருத்துவ அதிகாரி ஆர்.சாந்தி, தலைமையில் மருத்துவ குழுவினர் வந்திருந்தனர். 

இந்த முகாமில் 25 ஆண்களும் 5 பெண்களும் மொத்தம் 30 பேர்கள் இரத்த தானம் வழங்கினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை இக்கல்லூரியின் முதல்வர் ப.அகிலன் உத்தரவின்பேரில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மு.முருகானந்தம், உதவிப்பேராசிரியர் மற்றும் மாணவர் செயலாளர் செல்வன் சந்தோஸ்குமார் செய்து இருந்தனர். இம்முகாமில் இரத்த தானம் வழங்கியவர்களை இக்கல்லூரியின் முதல்வர் வெகுவாக பாராட்டினார். இதில் விரிவாக்கம், பொருளியில் மற்றும் புள்ளியில் துறையின் தலைவர் முனைவர் ந.வ.சுஜாத்குமார் கலந்து கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory