» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அனைவருக்கும் நாட்டுப்பற்று அவசியம்: குடியரசு தினவிழாவில் தொழிலதிபர் நெகிழ்ச்சி!

வெள்ளி 27, ஜனவரி 2023 3:31:39 PM (IST)தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகில் உள்ள கன்னிராஜபுரம் சத்திரிய நாடார் நடுநிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவில் பங்கேற்ற தொழிலதிபர் ஆனந்தன்ராஜமுத்து தனது சொந்த பொறுப்பில் பரிசுகளை வழங்கி நாட்டுப்பற்றை பேசி பாடி ஒரு சிலர் பரிசு வாங்குவது பெரிய விஷயமல்ல.. இந்தியாவின் எதிர்கால எல்லா துறைக்குமான விளக்குகள் நீங்கள்தான் எனவே அனைவரும் தாய் நாட்டுப்பற்றுடன் கடமையாற்றி அனைவரும் பரிசுகள் பெற வேண்டும் என நெகிழ்ச்சியுடன்" கூறினார்.

விழாவில் தலைமை ஆசிரியை மலர்விழிதன சேகரன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக உறவின்முறை தலைவர் சுந்தரமகாலிங்கம் பள்ளி செயலாளர் தமிழ்செழியன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செங்குட்டுவன் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள் கிராம உறவின்முறை கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் போட்டிகள் நடந்தது. கலை நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் தொழிலதிபர் ராஜமுத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக விழவிற்கு வருகை தந்தவர்களை ஆசிரியர் கலை முருகன் வரவேற்றார். ஆசிரியர் ஞானதயாளமாறன் நன்றி கூறினார். நிறைவில் விடுதலை எழுச்சிப் பாடல்கள் மற்றும் நாட்டுப்பண் இசையுடன் விழா நிறைவடைந்தது.


மக்கள் கருத்து

ப.முருகப்பெருமாள் ஆசிரியர் கன்னிராஜபுரம்Jan 29, 2023 - 08:22:55 AM | Posted IP 162.1*****

எம் பள்ளி செய்தி அழகாகவும் நேர்த்தியாகவும் படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.நன்றி

ப.முருகப்பெருமாள் ஆசிரியர், கன்னிராஜபுரம்Jan 29, 2023 - 08:18:54 AM | Posted IP 162.1*****

எம் பள்ளி செய்தி படத்துடன் அழகாகவும் நேர்த்தியாகவும் வெளியிடப்பட்டுள்ளது.நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory