» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

வெள்ளி 27, ஜனவரி 2023 3:26:22 PM (IST)தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் ஆங்கிலத்துறை  துறை சார்பில் "patriarchy Stereotypes:literary approach" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. 

விழாவில் இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறை   மாணவி சுதர்சனா வரவேற்புரை வழங்கினார், கல்லூரியின் முதல்வர் அன்பழகன் தனது வாழ்த்துரையின் போது மாணவர்கள்  திறம்பட கற்றுக்கொண்டு பயன் பெற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். 

அவர்களை அடுத்து சிறப்பு விருந்தினர் பிரியங்கா "patriarchy Stereotypes:literary approach என்ற தலைப்பில் ஆணாதிக்கம், பாலின வேறுபாடு, மற்றும் புதினத்தில் இருக்கக்கூடிய கதைகளை மிகச்சிறப்பாக வழங்கினார்.  அதற்கு ஏற்ப மாணவர்கள் அனைவரும் மிக ஆர்வத்துடனும் கவனத்துடனும் அவர்களது உரையை கேட்டு தங்களது சந்தேகங்களையும் தெளிவு படுத்திக் கொண்டனர். 

இரண்டாம் ஆண்டு மாணவி பிரசன்னா புஷ்பம் நன்றி உரை வழங்கினார். இவ்விழாவினை இரண்டாம் ஆண்டு மாணவிகள் தங்க முனியம்மாள் மற்றும் முனீஸ்வரி அழகாக தொகுத்து வழங்கினர். விழா சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வரின் வழிகாட்டுதல்படி ஆங்கிலத்துறை தலைவி அழகுமணி மற்றும் அனைத்து பேராசிரியர்கள் உதவியோடு சிறப்பாக செய்திருந்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory