» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
இராமனூத்து அரசு தொடக்கப் பள்ளியில் 74 வது குடியரசு தின விழா
வெள்ளி 27, ஜனவரி 2023 12:25:12 PM (IST)
இராமனூத்து அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், குற்றாலம் பழைய அருவியில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி எட்டயபுரம் அருகே உள்ள இராமனூத்து தொடக்க பள்ளியில் 74வது குடியரசு தின விழாவில் தலைமை ஆசிரியர் இப்ராஹிம் தேசியக் கொடியேற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மற்றும் குற்றாலம் பழைய அருவியில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய விஜயகுமாருக்கு மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக வீர தீர செயலை பாராட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.