» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் என்சிசி பொன்விழா
வியாழன் 1, டிசம்பர் 2022 12:32:46 PM (IST)
தூத்துக்குடி திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் என்சிசி பொன்விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் என்சிசி சுபேதார் மேஜர் கணேசன் மற்றும் ஹவால்தார் மேஜர் ஜெஹாங்கீர் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் தாளாளர் செலின், 1972 ஆம் ஆண்டு பயின்ற சாரணியர்கள், முந்தைய ANOக்கள் மற்றும் முன்னாள் சாரணியர் பங்கேற்றனர். தமிழகத்தின் சிறப்பு குறித்த கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்பட்டன. உடல் உறுப்பு தானம் குறித்து பாலே நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கும், பொன்விழா கமிட்டியில் அங்கம் வகித்த சாரணியர்களுக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. திருச்சிலுவை முத்துகள் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு டி-சர்ட்டுகள் சாரணியர்களால் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை பாத்திமா மோத்தா உதவியுடன் என்சிசி முதல் அதிகாரி லாலிடா ஜூட் முழு நிகழ்வையும் ஒருங்கிணைத்து செய்திருந்தார்.
Annee Soosan. ADec 1, 2022 - 08:04:20 PM | Posted IP 162.1*****