» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் வ.உ.சி. பள்ளி மாணவர்களுக்கு கணக்குப் பதிவியல் பயிற்சி!

வியாழன் 17, நவம்பர் 2022 5:49:00 PM (IST)ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் கணக்குப் பதிவியல் - தணிக்கையியல்  பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஓட்டப்பிடாரம் கிளையில் 5 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. கிளை மேலாளர் பழனீஸ்வரன் தலைமையில் வங்கி பணியாளர்கள் இப்பயிற்சியினை அளித்தனர். 

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பயிற்சி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கு ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் மேரி தலைமையில் தொழிற்கல்வி ஆசிரியர் கள்ளாண்டபெருமாள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் மகேஷ் பிரிவின் ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory