» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாகலாபுரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.

வியாழன் 10, நவம்பர் 2022 4:53:50 PM (IST)நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டம் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளியில் "அப்துல்கலாம் அறிவியல் மன்றம்” சார்பாக அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியை சே.சுப்புலட்சுமி, பள்ளி நிர்வாக உறுப்பினர் ஜே.மாரிக் கண்ணபிரான், தொழிற்கல்வி ஆசிரியர் கோ.சுரேஸ் குமார், அறிவியல் ஆசிரியைகள் வே.அஸ்டலட்சுமி, ப.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில், 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சி படுத்தி விளக்கம் அளித்தனர்.  முன்னதாக முதுகலை இயற்பியல் ஆசிரியர் வே.ஆறுமுகச்சாமி வரவேற்றார். நிறைவாக நிர்வாக முதுகலை உயிரியல் ஆசிரியை சு.மகேஸ்வரி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

கோ. சுரேஸ்குமார்Nov 10, 2022 - 05:59:02 PM | Posted IP 162.1*****

அறிவியல் படைப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory