» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் அறுவடை திருநாள் விழா

புதன் 9, நவம்பர் 2022 12:14:10 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு திட்டத்தின் கீழ் அறுவடை திருநாள் விழா நடைபெற்றது. 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் கடற்சார் உயிரினவளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி தருவைக்குளத்தில் "ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு” திட்டத்தில் அறுவடை திருநாள் கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவில் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட சிங்கி இறால்கள், வரி இறால்கள், பால் கெண்டை, கொடுவாமீன் மற்றும் பாறைமீன்கள் அறுவடை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் அகிலன் வரவேற்றார்.  நாகப்பட்டினம் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ. சுகுமார் தலைமை உரையாற்றினார். 

அவரது உரையில் பண்ணடுக்கு உணவு சார்ந்த மீன் வளர்ப்பின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் ஒருங்கிணைந்த கடல்கூண்டுகளில் மீன்வளர்ப்பு மேற்கொள்ளுவதல் மீனவ சமுதாய மக்களுக்கு மாற்று வாழ்வாதரமாக அமையும் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். எதிர்கால கடல் மீன் தேவையினை கடல் கூண்டுகள் மூலம் வளர்க்கப்படும் மீன்களே பூர்த்தி செய்யும் நிலை உண்டாகும் என்பதைக் குறிப்பிட்டார். 

மீன்வளத்துறை உதவி இயக்குனர் தி.விஜயராகவன், கூண்டுகளில் மீன் வளர்ப்பதற்கான அரசு வழங்கும் மானியங்கள் குறித்து எடுத்துரைத்தார். இவ்விழாவில் பேராசிரியர் மற்றும் தலைவர் சா.ஆதித்தன் நன்றியுரை ஆற்றினார்.  உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) மற்றும் முதன்மை திட்டஅலுவலர்  க.சே.விஜய் அமிர்தராஜ், இந்நிகழ்சியினை ஒருங்கிணைத்து ஏற்;பாடுகள் செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory