» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 17ஆம் தேதி கல்விக்கடன் சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!

சனி 4, நவம்பர் 2023 4:24:07 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் வருகின்ற 17ஆம் தேதி உயர்கல்வி பயிலுவதற்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி, வ.உ.சி கல்லூரியில் வருகிற 17ம் தேதி நடைபெறவுள்ள கல்வி கடன் முகாமின்  முன்னேற்பாடாக தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் கல்வி நிலையங்களின் பற்றாளர்கள் மற்றும் வங்கியாளர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   தலைமையில் முதுநிலை நிதி ஆலோசகர் (ம) மாநில தொடர்பு அலுவலர் (கல்விக் கடன் மேளா) ஜெ.வணங்காமுடி   முன்னிலையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கல்விக்கடன் பெறுவதற்கான முக்கிய அம்சங்கள் விண்ணப்பிக்க வேண்டிய செய்முறை வழிமுறைகள்  கல்விக்கடன் பெறுவதில் ஏற்படும் சிரமங்கள் சந்தேகங்கள் இவற்றை எல்லாம் களையும் வகையில் உரிய விழிப்புணர்வுகள் இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ/மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்காக கல்வி நிறுவனங்களையும் வங்கியாளர்களையும் ஒருங்கிணைத்து கல்விக்கடன் வழங்கும் முகாம் வருகின்ற 17.11.2023 (வெள்ளிக்கிழமை) அன்று தூத்துக்குடி, வ.உ.சி கல்லூரியில் காலை  9.30  மணியளவில் நடைபெறவுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி பயின்று வரும் மாணவ/மாணவியர்கள் கல்விக்கடன் தேவை என கருதுபவர்கள் கல்விக்கடன் விண்ணப்ப படிவத்தை www.vidhyalakshmi.co.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்த இணையதளத்தில் நன்கு அறிந்து விண்ணப்பிக்கலாம்.

உயர்கல்வி கலை, அறிவியல், பொறியியல், பொறியியல் சார்ந்த படிப்புகள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள், தொழிற்கல்வி/தொழில்நுட்ப கல்வி, ஆராய்ச்சி படிப்பு மற்றும் மேலை நாடுகளில்  பயிலுபவர்கள் ஓற்றை சாரள முறை/கலந்தாய்வு மூலம் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் (Management quota) ஆகிய பிரிவுகளின் கீழ் பயிலுபவர்கள் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் / பாதுகாவலர் ஆண்டு வருமானம்  ரூ. 4,50,000/- மிகாமல் இருக்க வேண்டும். மத்திய/மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படட கல்வி நிறுவனங்களில் பயிலுபவர்கள் கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து/போக்குவரத்து கட்டணம், கணினி சாரந்து பயிலுபவர்களுக்கு கணினி வாங்குவதற்குரிய கட்டணமும் பெறலாம்.


தந்தை/தாய் மற்றும் மாணவ/மாணவியர்கள் ஆதார் மற்றும் பான் கார்டு பெற்றிருத்தல் வேண்டும்.இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பதிவு எண் பெற்றிருத்தல் வேண்டும். இறுதியாக தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ், உண்மைச்சான்று, மாற்றுச்சான்றிதழ், கல்விக்கட்டண விபரங்கள் (கல்வி நிலையத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும், முதல் பட்டதாரிச் சான்று,  சாதிச்சான்று, வருமானச்சான்று,; வங்கி கணக்கு எண் ஐகுளுஊ ஊழனநஇ   ஆகிய விவரங்களைதயார் நிலையில் வைத்திருத்தல்; வேண்டும்.

கல்விக்கடன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக தத்தம் கல்வி நிறுவனங்களில் பயிலும் தகுதியுள்ள அனைத்து  மாணவ/மாணவியர்களுக்கு உரிய பயிற்சியினை (ர்யனௌ ழn வுசயiniபெ) வழங்கி விடுதலின்றி விண்ணப்பிக்க உரிய முயற்சிகள் மேற்;கொள்ள வேண்டும் இது தொடர்பாக மேற்பார்வை  செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்திலிருந்து அலுவலர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதை கல்வி நிறுவனங்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் விவரங்களை புழழபடந ளூநநவ-ல் பதிவுகளாக மேற்கொள்ளப்பட வேண்டுமென கல்வி நிலைய முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பப்படிவத்தில் 15.11.2023-க்குள் www.vidhyalakshmi.co.in/ பதிவேற்றம் செய்து விண்ணப்பித்து பயனடையலாம். இம்முகாம்  சிறப்பாக செயலாற்றிட  அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறும்,  ஒத்துழைப்பு நல்குமாறும் கல்வி நிறுவனங்களையும் வங்கியாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி   தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சதினேஷ்குமார்,  தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார்,  மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன்,  வங்கியாளர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பற்றாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory