» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
தனித்தேர்வர்களுக்கான முதல்நிலை தொழிற்தேர்வு: செப்.18க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 8, செப்டம்பர் 2023 4:28:54 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்நிலை தொழிற்தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் வகை (Category I): தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்: ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் Allied தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் பெறும் பொருட்டு தனித் தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
இரண்டாம் வகை (Category II): திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்: திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (COE NTC) பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
மூன்றாம் வகை (Category III): ஆகஸ்ட் 2018- வரை SCVT சேர்க்கை பெற்றவர்: ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற் பயிற்சி குழும (SCVT) தொழிற்பிரிவில் பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
நான்காம் வகை (Category IV):
பிற விண்ணப்பதாரர்கள்:
a) விண்ணப்பதாரர் 18-09-2023 அன்று 21 வயதுபூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
b) தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற்சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு / உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
c) SCVT திட்டத்தின் கீழ் ஆகஸ்ட்2019-ஆம் ஆண்டு முதல் சேர்க்கை செய்யப்பட்டு மாநில தொழிற்பயிற்சி குழுமம் (SCVT) தொழிற்பிரிவு பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த Category IV–இன்படி தனித் தேர்வராக விண்ணப்பித்து, முதன்மைத் தேர்வு இன்றி நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வு அனுமதிக்கப்படுவர். தனித் தேர்வராக தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர் அத்தொழிற்பிரிவிற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ள I (Allied Trade)& IV (Experienced Candidates) வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) பாடத்தில் 10.10.2023 மற்றும் செய்முறை (Practical) தேர்வு 11.10.2023 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். கருத்தியல் தேர்வு descriptive type-ல் இடம்பெறும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் கலந்து கொள்ள இயலும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜூலை 2024-இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வராக (Private Candidates) கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தொழிற்பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு NCEVT, புதுடெல்லி மூலம் தேசிய தொழிற்சான்றிதழ் (National Trade Certificate) வழங்கப்படும்.
தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்பபடிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு (Prospectus), ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான தேர்வு கட்டணத்தை (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவோ அல்லது தமிழக அரசின் கருவூலம்/ பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோ e-Challan மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைய வழியாக தேர்வுகட்டணம் ரூ.200 செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு( e-Challa) கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 18.09.2023 -க்குள் கோரம்பள்ளத்திலுள்ள தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர்/முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., நேர்முக தேர்வில் மாற்றம்
திங்கள் 4, டிசம்பர் 2023 5:13:36 PM (IST)

தூத்துக்குடியில் 17ஆம் தேதி கல்விக்கடன் சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
சனி 4, நவம்பர் 2023 4:24:07 PM (IST)

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் வங்கிப் பணிக்கு மாதிரி நோ்முகத் தோ்வு
திங்கள் 30, அக்டோபர் 2023 7:54:14 AM (IST)

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 16, செப்டம்பர் 2023 10:04:48 AM (IST)

தூத்துக்குடியில் செப்.16ல் தொழில் துவங்க முகாம் பயிற்சி!
திங்கள் 11, செப்டம்பர் 2023 4:20:37 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர்
செவ்வாய் 5, செப்டம்பர் 2023 8:30:11 AM (IST)
