» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: ஆக.25ஆம் தேதி துவங்குகிறது!!

திங்கள் 21, ஆகஸ்ட் 2023 11:57:48 AM (IST)

தூத்துக்குடியில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 25ஆம் தேதி துவங்க உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 3359 இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு 18.08.2023 முதல் 17.09.2023 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு 18 – 26 ஆகும். BC/ MBC / BCM/ DNC/ பிரிவினர் 28 வயது வரையிலும், SC/ SCA/ ST பிரிவினர் 31 வயது வரையிலும் விண்ணப்பம் செய்யலாம். இத்தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை https://tnusrb.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் அறியலாம்.

இப்போட்டித் தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNUSRB இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 25.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு அலுவலக வேலைநாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடிக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேரில் வரஇயலாத பட்சத்தில் உங்கள் அலைபேசியை பயன்படுத்தி Thoothukudi Employment office என்ற Telegrame சேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google Form-மை பூர்த்தி செய்து பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 0461 - 2340159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory