» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் : ஜூலை 14ல் தொடங்குகிறது!

திங்கள் 10, ஜூலை 2023 5:40:56 PM (IST)

தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் I, குரூப் II முதல்நிலை தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 14ஆம் தேதி தாெடங்குகிறது. 
 
இது தொடர்பாக ஆட்சியர் கி.செந்தில்ராஜ், வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலில் TNPSC தொகுதி- I தேர்விற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 2023 ம் மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TNPSC தொகுதி- I மற்றும் தொகுதி - II முதல்நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 14.07.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை நேரத்தில் நடைபெறும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. TNPSC தொகுதி- I மற்றும் தொகுதி - II தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயன் பெறலாம். கல்வித்தகுதி- ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். TNPSC தொகுதி IV தேர்வுக்கு தயாராகும் போட்டித் தேர்வு ஆர்வலர்களும் இந்த பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயன் பெறலாம். 

பயிற்சி வகுப்பு தொடர்பான கூடுதல் விபரங்களை 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.மேற்குறிப்பிட்டுள்ள TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், கல்விச்சான்றிதழ் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரடியாக தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

DivyaJul 12, 2023 - 07:54:24 AM | Posted IP 172.7*****

Tiruvannamalai District la class Eduppanggala

DharmarajJul 12, 2023 - 01:56:02 AM | Posted IP 172.7*****

G

SATHYAJul 11, 2023 - 02:17:58 PM | Posted IP 172.7*****

Mayiladuthurai mavattathilum class eduthal en ponra illatharasikaluku usefulla irukum

MuraliJul 11, 2023 - 01:54:00 PM | Posted IP 172.7*****

Tnpsc let down students hopes

KarthigaJul 11, 2023 - 01:41:35 PM | Posted IP 172.7*****

Online class must

PadharnishaJul 11, 2023 - 01:40:53 PM | Posted IP 172.7*****

Online

S mohaideen Abdul Kader jailaniJul 11, 2023 - 12:55:37 PM | Posted IP 172.7*****

I am aspire tnpsc examination could proper exam.he my prepare suggestions for more help.

பாண்டீஸ்வரிJul 11, 2023 - 12:20:19 PM | Posted IP 172.7*****

ஆன்லைன் வகுப்பு நடத்தினால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்

GuruJul 11, 2023 - 12:17:28 PM | Posted IP 172.7*****

நன்றி

ArunJul 11, 2023 - 07:44:42 AM | Posted IP 172.7*****

Police

M. Muthu LakshmiJul 10, 2023 - 06:42:35 PM | Posted IP 172.7*****

Useful

M. Muthu LakshmiJul 10, 2023 - 06:42:10 PM | Posted IP 172.7*****

Study

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory