» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 3, 4 தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம் வெளியீடு!
வியாழன் 6, ஜனவரி 2022 10:52:45 AM (IST)
டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 3, 4 தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) நடத்த இருக்கும் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 உள்பட அனைத்து விதமான தேர்வுகளிலும் புதிய நடைமுறையை கொண்டு வந்து இருக்கிறது. அதன்படி, தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம் என்ற அந்த நடைமுறைக்கான புதிய பாடத்திட்டங்கள், மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும் என்று ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து இருந்தார். அதன்படி, சமீபத்தில் குரூப்-1, 2 மற்றும் 2ஏ உள்பட சில பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது குரூப்-3, 4, 7-பி, 8 போன்ற பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த தமிழ் மொழி தகுதித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அதற்கடுத்த ‘பி’ பிரிவில் எழுதிய விடைத்தாள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே தேர்வை எதிர்கொள்ள இருக்கும் தேர்வர்கள் அந்த பாடத்திட்டத்தை பார்த்து வருகிற மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ள குரூப்-4 பதவிகளுக்கான தேர்வை எதிர்கொள்ள தயாராகுவதற்கு ஏதுவாக இருக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
வியாழன் 7, நவம்பர் 2024 8:54:38 AM (IST)

நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு
புதன் 9, அக்டோபர் 2024 5:18:05 PM (IST)

அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை செப்.30 வரை நீட்டிப்பு : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:45:55 PM (IST)

குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சனி 25, மே 2024 11:45:50 AM (IST)

டி.என்.பி.எஸ்.சி., நேர்முக தேர்வில் மாற்றம்
திங்கள் 4, டிசம்பர் 2023 5:13:36 PM (IST)

தூத்துக்குடியில் 17ஆம் தேதி கல்விக்கடன் சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
சனி 4, நவம்பர் 2023 4:24:07 PM (IST)
