» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)

விரைவில் குரூப் 4 பாடத்திட்டம் வெளியிடப்படும் : டிஎன்பிஎஸ்சி தகவல்

வெள்ளி 31, டிசம்பர் 2021 3:27:10 PM (IST)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் தேர்வாணைய இணையத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்து பல்வேறு போட்டித் தேர்வுகளில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மொழியில் 40 மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே தகுதிப்பெற்றர்களாகவும் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில்  குரூப்-4 தேர்வில்  முந்தைய ஆண்டு பழைய பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த ஆங்கில பாடம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  இனையதளத்தில் இடம்பெற்றுள்ள பழைய பாடத்திட்டம்  நீக்கப்படுகிறது. அதற்கு பதிலாக புதியதாக பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்கள் மட்டுமே இடம்பெறும்.  பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் (ஒஎம்ஆர்) முறையில் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். புதிய பாடத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory