» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கம்
வெள்ளி 24, டிசம்பர் 2021 5:26:08 PM (IST)
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் நேற்று இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், குரூப்-4, குரூப்-2, குரூப்-1 உள்ளிட்ட பலவகையான தேர்வுகளில் என்னென்ன பாடதிட்டங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த தேர்வுகளுக்கான மாதிரி கேள்விகளும் வெளியிடப்பட்டன. இதில், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த திருக்குறள் பாடத்திட்ட பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நிலையிலான போட்டித் தேர்வுகளான குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வின்போது திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தினசரி வாழ்வில் திருக்குறள் பயன்பாடு, மனித இனத்தில் திருக்குறள் ஏற்படுத்திய தாக்கம், சமூக பொருளதார அரசியலில் திருக்குறளின் பங்கு, திருக்குறனின் தத்துவம் என 6 தலைப்புகளில் திருக்குறன் சார்ந்த பகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பாடத்திட்டம் இடம்பெற்றிருந்தது.
ஆனால் நேற்று வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பகுதி நீக்கப்பட்டுள்ளது. 2019க்கு முன்பு இருந்த பாடத்திட்டம் மீண்டும் இடம்பெற்றிருப்பதாக துறைசார்ந்த பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருக்குறள் முழுமையாக புறக்கணிக்கப்படடிருப்பது தேர்வர்கள் மற்றும் தமிழார்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.