» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)

இந்திய ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்களுக்கு பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறை, நாடு முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 428 காலிப்பணியிடங்களை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப உள்ளது. அதில் தமிழகத்திற்கு உட்பட்ட தென்னக ரயில்வேயில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. அதற்கான அறிவிப்பு https://www.rrbchennai.gov. in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தால் போதுமானது.

விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. அதில் பெண்கள், முன்னாள் படைவீரர்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர் ரூ.250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 22-ம்தேதி கடைசிநாளாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory