» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
அஞ்சலக வங்கியில் 344 பணியிடங்கள் : அக்.31க்குள் விண்ணப்பிக்கலாம்
திங்கள் 21, அக்டோபர் 2024 10:50:24 AM (IST)
போஸ்ட் ஆபிஸ் பேமண்ட்ஸ் வங்கி எனப்படும் அஞ்சலக வங்கியில் காலியாக உள்ள 344 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட்
காலி இடங்கள்: 344
பதவி: நிர்வாக எக்சிகியூட்டிவ்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் அஞ்சலக பணியான கிராமின் டக் சேவக் (ஜி.டி.எஸ்.)கில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
வயது: 1-9-2024 அன்றைய தேதிப்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-10-2024
இணையதள முகவரி: https://www.ippbonline.com/web/ippb/current-openings