» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 500 அப்ரன்டிஸ் பணியிடங்கள்: செப்.17ம் தேதி கடைசி நாள்!

வெள்ளி 13, செப்டம்பர் 2024 5:52:39 PM (IST)

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 500 அப்ரன்டிஸ் பணியிடங்களுக்கு செப்.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில், தொழில் பயிற்சி சட்டம் 1961ன் கீழ், 500 அப்ரன்டிஸ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் உள்ள 500 அப்ரன்டிஸ் காலியிடங்களில் தமிழகத்தில் மட்டும் 55 பணியிடங்கள் உள்ளன. ஆந்திராவில் 50 இடங்களும், கேரளாவில் 22 இடங்களும், கர்நாடகாவில் 40 இடங்களும் உள்ளன.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க, 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் ரூ.944. எஸ்.சி., எஸ்.டி, பிரிவினருக்கு ரூ.708. PwBD பிரிவினருக்கு ரூ.472 விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். https://www.unionbankofindia.co.in/english/home.aspx என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .


மக்கள் கருத்து

RajadharshiniSep 14, 2024 - 12:28:37 PM | Posted IP 172.7*****

I searching for bank jobs

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory