» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 பணியிடங்கள்: பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும்
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 12:37:24 PM (IST)
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்தியன் ஓவர் சீஸ் வங்கி உள்ளது. நாடு முழுவதும் இந்த வங்கிக்கு கிளை உள்ளது. நாட்டில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றாக விளங்கும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாகவும், பயிற்சி பணியிடங்கள் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில் தற்போது ஒராண்டு ஒப்பந்த அடிப்படையில் 550 - பயிற்சி பணியிடங்களை (Apprentices) நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 550 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் நிரப்பப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை 130 ஆகும். புதுவையில் 14 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளாவில் 25 பணியிடங்களும், கர்நாடகாவில் 50 பணியியிடங்களும் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். 1.04.2020-01.08.2024க்குள் பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்சம் வயது வரம்பு 28க்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு.
ஊதியம்: அப்ரெண்ட்டீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள். மெட் ரோ நகரங்கள் என்றால் மாதம் ரூ.15 ஆயிரமும், நகரங்களில் 12 ஆயிரமும் கிராமப்புற பகுதிகளில் ரூ.10 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு முறை: ஆன்லைன் டெஸ்ட், உள்ளூர் மொழித்திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள டிகிரி முடித்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக பொதுப்பிரிவினர்/ஒபிசி/ பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு ரூ.944 செலுத்த வேண்டும். பெண்கள் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 708 கட்டணம் ஆகும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் தேர்வுக் கட்டணமாக ரூ.472 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்துக்கொள்ளவும். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க 10.09.2024 கடைசி நாள் ஆகும். ஆன்லைன் தேர்வு வரும் 22.09.2024(Tentative) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் தேர்வர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.iob.in/upload/CEDocuments/iobApprentices_Web_Ad_Final_28082024.pdf
தேர்வுக்கு விண்ணப்பிக்க: https://bfsissc.com/
Dhsnaswathi EswaramoorthiSep 1, 2024 - 06:26:16 PM | Posted IP 162.1*****