» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

தெற்கு ரயில்வேயில் 2,438 காலிப்பணியிடங்கள்: 10, 12ஆம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

செவ்வாய் 23, ஜூலை 2024 4:52:21 PM (IST)

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2,438 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐடிஐ, 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

பணியிடங்கள் விவரம்:

1. கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் - 1337 பதவிகள்

2. மத்திய பணிமனை, கோல்டன் ராக் - 379

3. சிக்னல் & டெலிகாம் பணிமனை, போதனூர் - 722 

மொத்தம் 2,438 பயிற்சி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வி தகுதி: ஐடிஐ, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படித்தவர்கள் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.. பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். அதாவது ஃபிட்டர் பணியிடத்திற்கு குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ ஆய்வக டெக்னிஷியன் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியில் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: 15 வயதுக்கு மேற்பட்டவர்களும் 24 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். பிர்ஷர்ஸ் என்றால் அதிபட்ச வயது வரம்பு 22 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

பயிற்சி காலம்:

பிரஷர்ஸ்கள் (Freshers)

பிட்டர் பணி: 2 ஆண்டுகள் பயிற்சி

வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்): ஒரு ஆண்டு 3 மாதங்கள்

மெடிக்கல் லேப் டெக்னிஷயன்ஸ்: ஒரு ஆண்டு 3 மாதங்கள்

முன்னாள் ஐடிஐ கேட்டகிரி / டெக்னிகல் தகுதி பெற்றிருந்தால் பயிற்சி காலம் 1 ஆண்டு ஆகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரயில்வே வாரிய விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும்.


மக்கள் கருத்து

Vasudhevan. SJul 26, 2024 - 02:25:39 PM | Posted IP 162.1*****

Interesting

b m sai santhoshJul 25, 2024 - 07:39:25 PM | Posted IP 172.7*****

b tac btec sience 2o20 2022 digree compleet me my adress v b mohan no 36 a bazzar street amirthapuram post thiruttani taluk thiruvelloore district 631209

M.ShobanaJul 25, 2024 - 02:46:17 PM | Posted IP 172.7*****

Nanla job

Mohamed sithik sJul 24, 2024 - 06:16:20 AM | Posted IP 162.1*****

Iam bca student

VijayJul 23, 2024 - 08:54:55 PM | Posted IP 162.1*****

Ok

kathiresanJul 23, 2024 - 06:47:43 PM | Posted IP 172.7*****

BE mechanical engineering

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory