» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

வியாழன் 20, ஜூன் 2024 3:27:49 PM (IST)

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II இல்(குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகள்) உள்ள 2,327 பணியிடங்களுக்கான நேரடி நியமன தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II இல்(குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகள்) உள்ள 2,327 பணியிடங்களுக்கான நேரடி நியமன தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழக அரசு துறைகளில் உள்ள  உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2ஏ பணியிடங்கள் என 2,327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் அதிகபட்சம் பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், மற்ற பிரிவினர் 42-க்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை என்பது 1.7.2024 அன்றோ அல்லது தெரிவு செய்யப்படும் நாளன்றோ அல்லது நியமனம் செய்யப்படும் நாளன்றோ தேர்வர் 60 வயதை பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.

மேலும் அதிகபட்ச வயது வரம்பு துணை வணிகவரி அலுவலர், வனவர் ஆகிய பதவிகளுக்கு பொருந்தாது. தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் உயர்நிலை, மேல்நிலைப் படிப்பகளில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வனவர் பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் உடற்திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100. முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.7.2024

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள: 14.9.2024


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory