» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 14ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 10, ஜூலை 2023 5:30:17 PM (IST)
தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 14ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இத்தனியார்துறை 20 வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, டிரைவர் மற்றும் கணிணி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன், தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வியாழன் 7, டிசம்பர் 2023 7:57:49 PM (IST)

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு!
வியாழன் 7, டிசம்பர் 2023 5:30:15 PM (IST)

26,146 காவலர் பணியிடங்கள்: டிச.31க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 30, நவம்பர் 2023 4:07:28 PM (IST)

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 496 இடங்கள்: நவ.30 கடைசி நாள்
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:35:59 PM (IST)

இந்திய அஞ்சல் துறையில் 1,899 பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 24, நவம்பர் 2023 5:27:16 PM (IST)

தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!
புதன் 25, அக்டோபர் 2023 3:42:25 PM (IST)
