» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
அஞ்சல் துறையில் 12,828 வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 10, ஜூன் 2023 4:44:17 PM (IST)
இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 12,828 கிராமின் டாக் சேவக் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 12,828. தமிழ்நாட்டில் 18 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணி: Gramin Dak Sevaks
1. Branch post Master
2. Assistant Branch Post Master)
தகுதி: மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட மாநிலங்களில் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: BPM பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,000-29,380 வழங்கப்படும். ABPM பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10,000 -24,470 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 11.6.2023 தேதியின்படி, 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து வயதுவரம்பு சலுகைகளை தெரிந்துகொள்ளவும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தவும். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விகிதங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்கள் www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.6.2023 .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வியாழன் 7, டிசம்பர் 2023 7:57:49 PM (IST)

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு!
வியாழன் 7, டிசம்பர் 2023 5:30:15 PM (IST)

26,146 காவலர் பணியிடங்கள்: டிச.31க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 30, நவம்பர் 2023 4:07:28 PM (IST)

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 496 இடங்கள்: நவ.30 கடைசி நாள்
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:35:59 PM (IST)

இந்திய அஞ்சல் துறையில் 1,899 பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 24, நவம்பர் 2023 5:27:16 PM (IST)

தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!
புதன் 25, அக்டோபர் 2023 3:42:25 PM (IST)
