» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..535 காலியிடங்கள்.

திங்கள் 29, மே 2023 9:05:33 PM (IST)

மத்திய அரசின் டி.எப்.சி.சி.ஐ (DFCCIL- Dedicated freight corridor corporation of india limited) நிறுவனத்தில் உள்ள 535 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: எக்ஸிகியூட்டிவ், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் 

மொத்த காலியிடங்கள் - 535

கல்விதகுதி: விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி, வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பள விவரம்: பதவிகளுக்கு கேற்ப 25,000 - 1,20,000 வரை.

தேர்வு முறை: கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, கணினி வழி திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/83083/Index.html என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.06.2023 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory