» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பது எப்படி?
செவ்வாய் 1, அக்டோபர் 2019 5:45:11 PM (IST)
படித்துவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்கான உதவித் தொகையைப் பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை, வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள், பிளஸ் டூ, டிப்ளமோ, இளங்கலை முடித்து, தனியார், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40 வயதுக்குள்பட்டவராகவும் (ஆதி திராவிடர் 45 வயதுக்கு மிகாமல்) இருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம்: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் (மாதம் ரூ.6,000) இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித் தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு இல்லை. கடந்த 25.07.2019 முதல் அரசாணை நிலை எண்.127ன்படி உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்களைப் பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். மாற்றுத்திறனாளிகளும் உதவித் தொகைக்கான விண்ணப்பத்தினை பெறலாம். மேலும் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்ற பயனாளிகள் சுய உறுதி மொழி ஆவணம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண்ஸ வங்கி புத்தக நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
மக்கள் கருத்து
அரோக்கியா திபர்கிஸ் ரோச்Oct 23, 2019 - 12:48:48 PM | Posted IP 162.1*****
10. + 2 சாத்தியம்
TUTYOct 15, 2019 - 12:12:15 PM | Posted IP 162.1*****
INTHA SCEME TOTALY WASTE ,FINANCE WASTE
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள்: தோ்வுத் தேதிகள் அறிவிப்பு
சனி 13, பிப்ரவரி 2021 11:28:56 AM (IST)

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
செவ்வாய் 2, பிப்ரவரி 2021 3:08:59 PM (IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கு முக்கிய அறிவுரைகள் : தேர்வாணையம் அறிவிப்பு
புதன் 30, டிசம்பர் 2020 4:54:34 PM (IST)

டிஎன்பிஎஸ்சி 26-ஆவது தலைவராக கா.பாலசந்திரன் பொறுப்பேற்பு
செவ்வாய் 14, ஏப்ரல் 2020 12:36:40 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2020 8:32:19 AM (IST)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்
சனி 8, பிப்ரவரி 2020 8:42:43 AM (IST)

GNANA MANIKANDAN VAug 28, 2020 - 10:06:31 AM | Posted IP 162.1*****