» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

கோடையில் உடலை பாதுகாக்க சில டிப்ஸ்...!

கோடை வெயில் என்றாலே மக்கள் பதைபதைக்கும் காலமாக மாறிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் வெப்பத் தாக்குதலுக்கு இரையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வெயிலில் இருந்து பிழைத்துக்கொள்ள பெரும்பாலானோர் தங்களின் உணவு வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

என்னென்ன உணவு முறைகளை கடைபிடிக்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

* வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். அதிகமான நீர்போக்கினால் உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரனம், மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதைத் தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம்.

* எங்குச் சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக்கொள்வது அவசியம். எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோமோ உடல் நிலை அவ்வளவு சீராக இருக்கும்.

* பொதுவாகக் காபி மற்றும் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காபி மற்றும் டீ உடல் வெப்பத்தை அதிகரிக்கும் திறன் கொண்டவை. எனவே வெப்ப சூட்டை தவிர்த்துக்கொள்ள டீ மற்றும் காபியை தவிர்ப்பது நல்லது.

* வெயில் காலத்தில் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரிசி, சப்பாத்தி போன்றவற்றை வழக்கம்போல் சாப்பிடலாம். உணவில் மோர், தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கள் சாப்பிடலாம்.

* சுட்டெரிக்கும் வெயிலில் உடலைச் சீராக வைத்துக்கொள்ள, ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்த முறையில் உணவு கட்டுப்பாட்டை கொண்டு வருவது அவசியம். ஆரோக்கியமான உணவு முறைகளை கடைபிடித்து வெயில் காலத்தில் நம்மை நாமே பாதுகாத்து கொள்வது தான் புத்திசாலித்தனம்.


மக்கள் கருத்து

TAMIL KUDIMAGANApr 23, 2024 - 03:17:56 PM | Posted IP 172.7*****

BEER COOLINGA KUDIKALAM

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory