» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

இயற்கை முறையில் முகப்பரு நீங்கி முகம் பொலிவு பெற சில எளிய குறிப்புகள்!



பருக்கள் வந்துவிட்டாலே பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்  பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும். பருக்கள் வந்தால் நீக்க, அதனை சில வீட்டுக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் : சருமத்தை மென்மையாக்கக் கூடிய சக்தி வெள்ளிக்காயில் இருக்கிறது. இதில் வைட்டமின்கள் A, E மற்றும் C நிறைந்துள்ளன. இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அதிகப்படியான எண்ணெயை நீக்கி முகப்பருக்களையும் முற்றிலும் நீக்கும். வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள். அல்லது தினமும் வெள்ளரிக்காய் ஊற வைத்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

பூண்டு : தொற்றுக் கிருமிகளை நீக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. குறிப்பாக இதில் இருக்கும் சல்ஃபர் முகப்பருக்களை நீக்கக் கூடியது. பூண்டை மைய அரைத்து அதன் சாறை பருக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள்.முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகு பெறும்.

தேன் : தேன் பருக்களுக்கு சிறந்த ஆண்டி மைக்ரோபியலாக இருக்கும். பஞ்சை தேனில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு : முகப்பருக்கள் வரக் காரணமான கிருமிகளை எலுமிச்சை முற்றிலும் அழித்துவிடும். எலுமிச்சை சாறைப் பிழிந்து, பஞ்சில் நனைத்து பருக்களின் மேல் ஒத்தி எடுங்கள். பருக்கள் உடைந்து இருந்த இடம் தெரியாமல் போகும்.

புதினா : இதில் இருக்கும் சாலிசிலிக் அமிலம் பருக்களை நீக்க உதவும். மூடியுள்ள சருமத் துளைகளை நீக்கும். இறந்த செல்களையும் நீக்கும். புதினாவை அரைத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பில் சிடர் வினிகர் : இதில் இருக்கும் சரும நன்மைகள் மிக அதிகம். இரவு தூங்கும்முன், பருக்கள் உள்ள இடத்தில் இதைத் தடவி காலை எழுந்து பார்த்தால் உங்களாலேயே நம்ப முடியாது. அந்த அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

க்ரீன் டீ : கிரீன் டீ பேகை தண்ணீரில் நனைத்து அல்லது ஃபிரிஜ் ஃப்ரீசரில் பேகை வைத்து பருக்கள் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் நீங்கும்.

டீ ட்ரீ ஆயில் : முகத்தில் உள்ள கிருமிகளை நீக்கும் ஆண்டி பாக்டீரியலாக செயல்படும். எண்ணெயில் பஞ்சை நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தி எடுத்து 15 - 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா : பேக்கிங் சோடாவை பருக்கள் உள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ பருக்கள் நீங்கும்.

டூத் பேஸ்ட் : முகப்பரு உள்ள இடத்தில் டூத்பேஸ்ட்டை நேரடியாக அப்ளை செய்யுங்கள். இதனால் முகப்பருவில் உள்ள கிருமிகள் மற்றும் நீரை உறிஞ்சி கூடுதலான எண்ணெய்யையும் உள்ளிழுத்துக் கொள்ளும். பருக்களும் நீங்கும். பேஸ்டில் ஹைட்ரஜன் பராக்ஸைட் இருப்பதால், சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இதைத் தவிர்க்கலாம். பேஸ்ட் அப்ளை செய்யும் முன் ஐஸ் கட்டிகளை பருக்களில் வைத்து தேய்த்த பிறகு அப்ளை செய்யுங்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory