» சினிமா » செய்திகள்
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
புதன் 24, ஜூன் 2026 10:36:52 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173-ஆவது புதிய திரைப்படத்திற்கு 'தர்மன்' எனத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளதுடன், இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 173-ஆவது திரைப்படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 'தர்மன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புதிய திரைப்படத்தைக் கலைப்பயணத்தில் முக்கியக் கூட்டாளியான கமல்ஹாசன் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்தை 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிம்ரன் மற்றும் ராஷி கன்னா உள்ளிட்ட நடிகைகள் லீடு ரோலில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் உடன் பேட்ட படத்தில் சிம்ரன் இணைந்து நடித்த நிலையில், கமல்ஹாசன் உடன் ஏற்கனவே அவர் சில படங்களில் நடித்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சிம்ரனுக்கு பெரிய வாய்ப்பாக தர்மன் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்! - ஏ.கே. 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:58:11 PM (IST)

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க!" - 'ராயன்' தேசிய விருது சர்ச்சைக்கு நடிகர் தனுஷ் ஆதங்கம்!
திங்கள் 27, ஜூலை 2026 4:53:22 PM (IST)

50 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்குகளில் முதல்வரின் திரைப்படம்: எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய் சாதனை!
வியாழன் 23, ஜூலை 2026 4:51:10 PM (IST)

நிவின்பாலி-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை அக்-1ல் ரிலீஸ்
புதன் 22, ஜூலை 2026 5:54:13 PM (IST)

கணித மேதை ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா ப்ரீத்தி முகுந்தன்? - உண்மைப் பின்னணி
திங்கள் 20, ஜூலை 2026 11:58:48 AM (IST)

72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன் படங்களுக்கு விருதுகள்!
சனி 18, ஜூலை 2026 8:25:07 PM (IST)

