» சினிமா » செய்திகள்
சூர்யாவின் கருப்பு: தெலுங்கு டைட்டில் வெளியீடு!
சனி 4, ஏப்ரல் 2026 11:08:41 AM (IST)

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள "கருப்பு” திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்தப் படம், ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் படத்திற்கு தெலுங்கில் "வீரபத்ருடு” எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் நேற்று (ஏப்ரல் 3) அறிவித்தனர்.
சூர்யா இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் த்ரிஷா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வைரல் ஹிட் பாடல்களைக் கொடுத்து வரும் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள "நாங்க நாலுபேரு” என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருப்பது படத்தின் கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் கோடை விருந்தாக வரும் ஏப்ரல் 14 (சித்திரைத் திருநாள்) அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூர்யாவின் அதிரடியான சமூக அக்கறை கொண்ட படம் வெளியாக உள்ளதால், திரையரங்குகளில் கொண்டாட்டங்களுக்கு இப்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
புதன் 24, ஜூன் 2026 10:36:52 AM (IST)

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஓம்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:30:06 PM (IST)

சின்னத்திரை உலகில் பெரும் சோகம்: இளம் நடிகை சஞ்சிதா தற்கொலை!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:35:12 PM (IST)

எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள் : நடிகர் மகேந்திரன்
செவ்வாய் 16, ஜூன் 2026 11:20:40 AM (IST)

குழந்தை போன்ற தூய்மையான உள்ளம் கொண்டவர்: பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி!
புதன் 10, ஜூன் 2026 5:53:40 PM (IST)

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த்: படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 11:55:56 AM (IST)

